Rama Setu: in Tamil tradition — Aravindan Neelakandan

Saturday, September 22, 2007

சிலப்பதிகாரம் தெரியாத கருணாநிதி…

 தமிழக முதலமைச்சர் இராம பிரானைக் குறித்து பேசியுள்ளது அவரது பகுத்தறிவைக் காட்டுவதாக நினைத்து பேசியிருக்கலாம். ஆனால் உண்மையில் அது பகுத்தறிவின்மையைத்தான் காட்டுகிறது. இந்திய அகழ்வாராய்ச்சி மையத்தின் இயக்குநராக இருந்தவரும் ‘இந்தியாவின் தலைசிறந்த அகழ்வாராய்ச்சியாளர்’ என கருதப்படுபவருமான பி.பி.லால் இராமாயணம் விவரிக்கும் இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தினார்.

 இந்த ஆராய்ச்சிகளின் முடிவினைத் தெரிவிக்கும் லால்,“இந்த அகழ்வாராய்ச்சி முடிவுகள் இராமாயணம் கற்பனை கதை அல்ல மாறாக வரலாற்று உண்மை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதெனவே கருத வேண்டும்.” என கூறியுள்ளார். அயோத்தி கோவில் இருந்த இடத்தில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் ராமர் பெயர் பொறித்த முத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (அவுட்லுக் ஜூன் 2003)

 முதலமைச்சருக்கு இந்த அகழ்வாராய்ச்சி உண்மைகள்தான் தெரியவில்லை, சிலப்பதிகாரம் கூடவா தெரியவில்லை?

 இளங்கோ அடிகள் கோவலனைப் பிரிந்த காவிரிப்பூம்பட்டினத்தைக் கூறுகையில் ‘அருந்திறல் பிரிந்த அயோத்தி போல’ என இராமரைப் பிரிந்த அயோத்தியை அல்லவா உதாரணம் காட்டுகிறார்! அதுமட்டுமல்ல ஸ்ரீ ராமன் குறித்து நம் நற்றமிழ் இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என காணலாம்.

 புறநானூற்றிலும் சரி அகநானூற்றிலும் சரி ஸ்ரீ ராமகாதை குறிப்பிடப்படுகிறது. இன்று பிரச்சனைக்கு உள்ளாகியுள்ள பகுதிக்கு அருகே அமைந்த பாண்டியர்களுக்குரிய பழமையான கோடிக்கரையில் ஸ்ரீ ராமபிரான் ஒரு படர்ந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்து இராணுவ ஆலோசனை நடத்துகிறார். அப்போது பறவைகள் ஒலி அதிகமாக ஒலிக்கவே ஸ்ரீ ராமன் அவற்றினை அமைதியாக இருக்க சொல்கிறார். பறவைகளும் ஸ்ரீ ராமன் சொல்லுக்கு கட்டுப்படுகின்றன.மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் எழுதிய இப்பாடல் சொல்கிறது:

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி
முழங்கு இரு பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல் வீழ் ஆலம் போல – அகம்(70:13-16)

ஆம்! சங்க இலக்கியம் ஸ்ரீ இராமபிரானை போரில் வெல்லும் ஸ்ரீ இராமன் எனமட்டும் புகழவில்லை ஸ்ரீ இராமன் கூறும் வார்த்தை ‘அருமறை’ என்றே சொல்கிறது. தமிழரின் வீரத்துக்கு இலக்கிய ஆவணமாக திகழும் புறநானூற்றில் ஸ்ரீ இராமபிரான் ‘கடுந்தெறல் இராமன்’ என ஊன் போதி பசுங்குடையார் (புறம் 70:15) பாடியிருக்கிறார். தமிழ்-தமிழர் பண்பாடு என்றெல்லாம் பேசும் கருணாநிதிக்கு இதுவுமா தெரியவில்லை?

 ஜாப்னா இலங்கை தமிழ் வம்ச நாணயங்களில் சேது

 இராமர் சேதுவை பொறுத்தவரையில் அது இந்துக்களின் மத நம்பிக்கைகளுக்கு அப்பால் இந்த தேச ஒற்றுமையின் அடையாளம். இதனை மகாத்மா காந்தியே ‘இந்திய சுவராச்சியம்’ எனும் தம் நூலில் கூறியுள்ளார். மகாத்மா காந்தி கூறுகிறார்;

“நம் தொலைநோக்குடைய முன்னோர்கள் ஏன் சேதுபந்தனத்தை தெற்கிலும் ஜகன்னாத்தை கிழக்கிலும் ஹரித்துவாரை வடக்கிலும் புனிதத்தலங்களாக நிறுவினார்கள்? அவர்கள் மூளையற்றவர்கள் அல்ல. ஒருவர் வீட்டிலேயே கடவுளை வணங்கமுடியும் என அறிந்தவர்கள்தான். நல்லிதயம் கொண்டவர்கள் வீட்டில் கங்கையின் புனிதம் இருப்பதாக கூறியவர்கள்தாம். ஆனால் அவர்கள் இதனை பாரதம் இயற்கையாகவே ஒரு பிரிக்கப்படாத ஒரு தேசமாக அமைந்துள்ளது என உணர்த்திட செய்தார்கள். உலகில் வேறெங்கும் காணப்பட முடியாத நிகழ்வாக புனித தலங்களின் மூலம் இந்தியர்களின் மனங்களில் தேசியத்தின் ஜுவாலையை ஏற்றினார்கள். ” (ஹிந்த் சுவராச்சியம் அத்தியாயம்:9)

அன்று மகாத்மா காந்தியால் சுட்டிக்காட்டப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டின் அத்தகைய புனித சின்னமொன்றை இன்று சோனியா காந்தியின் காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் திமுக எனும் இனவாத க்ட்சியுடன் இணைந்து இடிக்க முற்படுவது பாரதத்தின் சுய கௌரவம் அடைந்துள்ள தாழ்மை நிலையைக் காட்டுகிறது.

ஸ்ரீ ராமரைப் பொறுத்தவரையில் அவர் இந்த தேசதர்மத்தின் சின்னம். சத்குரு நானக் ராஜா ராமர் தென்னிலங்கைக்கு பாலம் கட்டி சென்று அரக்கக் கும்பலை அழித்ததை பக்தியுடன் பாடியுள்ளார். புனித குரு கிரந்த சாகேப்பில் ஸ்ரீ ராமபிரானின் திருநாமம் 3533 முறை பெருமைப்படுத்தப்படுகிறது. (மிக அதிக அளவில் இறை நாமமாக குரு கிரந்த சாகேப் புகழுவது ஹரி எனும் திருநாமத்தைதான். 8344 முறை).

 மேலும் சத்குரு நானக் ரரமேச்வரம் வந்து அங்கிருந்து இலங்கை சென்றார், இன்றைக்கும் சத்குருநானக்கின் புனித வருகையை நினைவுகூறும் குருத்வாரா அங்கு உள்ளது. மேலும் குரு கோவிந்த சிங் தம்மை ஸ்ரீ ரரமபிரானின் வழித்தோன்றல் என கூறியுள்ளார்.

 எனவேதான் அவுரங்கசீப்பின் முன் தர்மம் காக்க முன்வந்த சீக்கிய வீர குரு தேஜ்பகதூரை ஒப்ப

 நவீன விஷப்பல் கொண்ட அரக்க சக்தியின் சவாலை ஏற்று ஸ்ரீ ராமன் பெருமையை விவாத மேடையில் ஏற்றுப் பேச முன்வந்துள்ளார் பாஞ்சால சிங்கமும் அகில பாரத பயங்கரவாத எதிர்ப்பு தலைவருமான பிட்டா. அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“ராமர் பாலத்தைக் காக்க உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம்….ராமர் உண்மை என நான் கருணாநிதியிடம் நேரடியாக விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன். அதில் தோற்றுவிட்டால் உயிரை விடவும் தயார்!”

 ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே அவதார புருஷர் அய்யா வைகுண்டர் ஸ்ரீ ராம பக்தர்களை அவமானப்படுத்தும் அரக்க அல்பர்கள் எத்தகைய தண்டனையை பெறுவார்கள் என கூறியுள்ளார்:

பாணமது தன்னாலும் பத்தினிதன் கற்பாலும்
நாணமது கெட்ட அரக்கா உன் நல்ல பத்து தலை இழந்து
சேனைத்தளம் இழந்து சிரசு இழந்து வாழ்விழந்து
வானரங்கள் வந்து உன்றன் வையகத்தை சுட்டழித்து
உன் சடலம் எல்லாம் உழுத்துப் புழுபுழுத்து
சஞ்சலப்பட்டு சண்டாளா நீ மடிய
வேண்டுவேன் தவசு விமலன்தனை நோக்கி (அகிலத்திரட்டு அம்மானை (1179-11185)

மேலே இருப்பதை எந்த அரசியல்வியாதியையும் மனதில் வைத்து சொல்லவில்லை. ஆனால் சாதியக்கொடுமைகளையும் அன்னிய மதமாற்றிகளையும் எதிர்த்து குரல் கொடுத்த ஒரு அவதார புருஷர் இராமபக்தர்களை அவமானப்படுத்தி அன்று அரசாண்ட ஒரு அரக்க அரசனுக்கு இடப்பட்ட சாபத்தை இங்கு சொல்லி இருக்கிறது. தீயவர்கள் அழிய விரும்புபவர்கள் இவ்வாறே வேண்டலாம்.

அய்யாவழி மக்களின் திருநாமம் தாங்கிய காவிக்கொடியான அன்புக்கொடி இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான பாலபிரஜாபதி அடிகளார் கூறியுள்ளதாவது:

சேது சமுத்திர திட்டமானது ஊழல் செய்வதற்கென்றே கொண்டு வரப்பட்டுள்ள திட்டமாகும். கடலில் செலவழிக்கிறோம் என்று பலகோடி ரூபாயைக் கொள்ளை அடிப்பதற்கென்றே இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது….இராமர் தன் கைகளால் இந்த பாலத்தைக் கட்டினார் என்பது இந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் கை வைப்பது சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு மிகப்பெரிய சாபமாகவே அமையும்.பாலம் இடிக்கப்படுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோமே தவிர மாற்றுவழியில் இந்த திட்டத்தை ஊழல் இல்லாமல் நிறைவேற்றப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை….காந்தியடிகள் தற்போது உயிருடன் இருந்தால் ராமர் பாலத்தை காப்பாற்றும் இது போன்ற போராட்டன்களுக்கு அவரே தலலமை பொறுப்பேற்றிருப்பார். ராமரைப் பின்பற்றி தன்னன மகாத்மாவாக்கியவர் காந்தியடிகள். சாதிய சமத்துவத்தை விரும்பியவர் இராமர்….இந்தியாவில் ராமரை தோற்கடிக்க நினைத்த யாரும் வெற்றி பெற்றதில்லல. இராமர் பாலத்தை இடிக்க நினனத்தால் இந்தியா முழுவதும் இன்னொரு புரட்சி உருவாகும்.”

http://arvindneela.blogspot.com/2007/09/blog-post.html

Advertisements

One Response to Rama Setu: in Tamil tradition — Aravindan Neelakandan

  1. suryanarayanan says:

    Thanks for posting it Dr Kalyanaraman in yahoo. I did learn something new from Puranauru. Thanks s to sri Neelakantan. I will send this a lot of my friends.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: